இராசபுத்திர பிருத்திவிராச் சௌகான்

 இந்து இராசபுத்திர 

பிருத்திவிராச் சௌகான்

இராசபுத்திர மரபைச்சேர்ந்த மன்னன்..!

தாரைன் போர்...!

BZ.History Notes,

★  பிருத்திவிராஜ் சௌகான் (Prithviraj Chauhan)(கிபி 1168-1192), 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்தியாவில் இருந்த இராச்சியம் ஒன்றை ஆண்ட இந்து இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன் ஆவார். 

★ தில்லி அரியணையில் இருந்த கடைசிக்கு முந்திய இந்து மன்னன் இவராவார். 

★ இவரது காலம் கிபி 1179 ஆம் ஆண்டில், தனது 13 வயதில் ஆட்சிக்கு வந்த பிரித்திவிராஜ், இரட்டைத் தலைநகரங்களான அஜ்மீர், டில்லி ஆகிய நகரங்களிலிருந்து ஆட்சி நடத்தினார். 

★ இவர், இன்றைய இராசசுத்தான், அரியானா ஆகிய மாநிலங்களின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக இருந்த நாட்டை ஆண்டதுடன், முசுலிம் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இராசபுத்திரரை ஒன்று படுத்தினார்.


பிருத்திவிராஜ் சௌகான்

பிறப்பு : 1149

இறப்பு : 1192 (அகவை 43)

தேசியம் : இந்தியா

மற்ற பெயர்கள் :

மூன்றாம் பிருத்திவி ராஜ்

இரட்டைத் தலைநகர்: 

அஜ்மீர், தில்லி,

பணி : 

அஜ்மீர் மற்றும் தில்லியின் அரசன் (12 ஆம் நூற்றாண்டு)

சம்யுக்தாவுடன் பிரித்தி விராஜ்ன் காதல் கதை:

கன்னோசி நாட்டின் மன்னன் செயச்சந்திர ரத்தோடின் மகளான சம்யுக்தாவுடன் பிரித்திவிராஜ் கொண்ட காதல் வட இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு காதல் கதை ஆகும். 


பிரித்திவிராஜின் அரசவைப் புலவரும், அவரது நண்பருமான சந்த் பார்தாய் என்பவர் எழுதிய பிரித்திவிராஜ் ராசோ என்னும் காவியத்தின் கருப்பொருளும் இதுவே.


பிரித்திவிராச், ஆப்கானிய மன்னனான கோரி முகமதுவை 1191 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதல் தாரைன் போரில் தோற்கடித்தார். 


ஆனாலும் அடுத்த ஆண்டு மீண்டும் கோரி தாக்கியபோது இடம்பெற்ற இரண்டாம் தாரைன் போரில் பிரித்திவிராச் தோல்வியடைந்தார். 


இவரது தோல்விக்குப் பின்னர் வட இந்தியா முசுலிம்களின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு டில்லி அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. டில்லியில் உள்ள கிலா ராய் பித்தோரா என்னும் பெயர் இவரது பெயரைத் தழுவி இடப்பட்டது ஆகும்.


Comments

Popular posts from this blog

இந்திய வரலாற்றில் நடைபெற்ற முக்கி போர்கள்..!

கடைசி முகலாயப் பேரரசர் பகதூர்சா சஃபார் (1775 - 1862)