முதல் தாரைன் போர்...!
முதல் தாரைன் போர்...!
BZ.History Notes,
முதல் தாரைன் போர் என்பது என்ன?
முதல் தாரைன் போர் என்பது, 1191 ஆம் ஆண்டில், ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான கோரி முகமதின் படைகளுக்கும், இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த பிரித்திவிராச் சௌகானின் படைகளுக்கும் இடையில், தற்கால அரியானா மாநிலம், குருச்சேத்திர மாவட்டம், தானேசர் அருகில் அமைந்த தாரைன் என்னும் நகரில் இடம்பெற்ற போரே தாரைன் போர் எனப்படும்.
"தாராவோரி" என அழைக்கப்படும் தாரைன் நகரம்.
★ "தாராவோரி" எனவும் அழைக்கப்படும் தாரைன் நகரம் இந்தியாவின் இன்றைய அரியானா மாநிலத்தில் தானேசுவரம் அண்மையில் அமைந்துள்ளது.
கோர் நாடு ஆட்சியாளர் கோரி முகமது:
★ ஆப்கானிசுத்தானில் இருந்த கோர் என்னும் சிறிய நாடு ஒன்றின் ஆட்சியாளராக இருந்த கோரி முகமது இன்றைய ஆப்கனிசுத்தானின் பெரும்பகுதியைக் கைப்பற்றியபின்னர்.
★ இன்றைய பாகிசுத்தானின் பெரும் பகுதியையும் கைப்பற்றிக்கொண்டு வட இந்தியாவுக்குள் நுழைந்தார்.
பிரித்திவிராசு சௌகான்:
★ அக் காலத்தில் வட இந்தியாவின் இராசசுத்தான், அரியானா ஆகியவற்றுள் உள்ளடங்கிய பகுதிகளை ஆண்டு வந்தவர் பிரித்திவிராசு சௌகான்.
★ இராசபுத்திர சௌகான் மரபினரான இவர் அக்காலத்து வட இந்திய மன்னர்களுள் பலம் பொருந்தியவராக இருந்தார்.
இரட்டைத் தலைநகர்:
★ டில்லி, அஜ்மீர் ஆகிய நகரங்களை இரட்டைத் தலைநகர்களாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தார்.
★ முகம்மத் கோரியின் படையெடுப்புக்கள் அவரது படைகளைப் பிரித்திவிராசின் எல்லைவரை கொண்டுவந்தன.
★ 1191 ஆம் ஆண்டில் பிரித்திவிராசின் நாட்டின் வடமேற்கு எல்லையில் இன்றைய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பகுதியில் இருந்த கோட்டை யொன்றை முகம்மத்தின் படைகள் கைப்பற்றின.
★ பிரித்திவிராசின் படைகள், சிற்றரசனான டில்லியைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் தலைமையில் எல்லைக்கு விரைந்தன.
★ இரண்டு படைகளும் தாரைனில் சந்தித்துக் கொண்டன.
பதிண்டா கோட்டை:
★ முகம்மத் கோரியின் படைகள் எல்லையில் இருந்த பதிண்டா கோட்டையை முற்றுகையிட்டன.
★ பிரித்திவிராசு தனது மாமனாரான செயச்சந்திர ராத்தோரிடம் உதவி கோரினார்.
★ ராத்தோர் உதவி வழங்க மறுத்துவிட்டார். அனாலும் பிரித்துவிராசு தானே படைநடத்திச் சென்று தாரைன் என்னுமிடத்தில் எதிரிப்படைகளுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தார்.
★ முதலாம் தாரைன் போர் பிரித்திவிராசுக்கு வெற்றியாக முடிந்தது.
★ எனினும், இது நிலைக்கவில்லை அடுத்த ஆண்டே முகம்மத் கோரியின் படைகள் மீண்டும் தாக்கிப் பிருத்திவிராசின் படைகளைத் தோற்கடித்தன.
Comments
Post a Comment